ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி இனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்தன.
இதன் வினைவாக ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது.
பெருளாதார சரிவை சற்று சமாளிக்க, இனி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என ரஷ்யா அறிவித்தது.
இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இனி ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனி எங்களை அச்சுறுத்த முடியாது என மிக தெளிவாக புடினிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
வருங்காலங்களில் ரூபிளில் ரஷ்ய எரிவாயுவிற்கு நாங்கள் பயணம் செலுத்த மாட்டோம்.
முடிந்தவரை விரைவாக ரஷ்யாவை சார்ந்தில்லாமல் சுதந்திரமாக எரிவாயு பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.