வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இயற்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்துள்ளார்.
இயற்கையான சூழல் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்று தெரிவித்த நீதிபதி அவர்கள், ரியல் எஸ்டேட், சுரங்கங்கள், அணைகள் கட்டுவது ஆகியவற்றிற்காக காடுகள் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், “இந்தியாவில் 5 சதவிகித வனப் பகுதிகள் மட்டுமே சுற்றுச்சூழல் பகுதியாக. வன விலங்குகளின் வாழ்விடங்களாக உள்ளது. இந்த ஐந்து சதவீத வனப்பகுதியே மீதமுள்ள 95% பகுதியில் வசிக்கும் உயிரினங்களுக்கான இயற்கை சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
அவற்றை அழிக்க நினைப்பது மனித குலத்தின் அழிவுக்கு வழி வகுக்கும்” என்று நீதிபதி தெரிவித்தார்.