சியோல்,
தென் கொரியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை சரிந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அடுத்த வாரம் முதல் ரத்தாகும் என பிரதமர் கிம் பூ கியும் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பொது நிகழ்ச்சிகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் முககவசம் அணிய வேண்டும், இது கட்டாயம் ஆகும். அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், பொது இடங்களில் கூடுவது தொடர்பான கட்டுப்பாடுகள் கடந்த 18-ந் தேதி முதல் அகற்றப்பட்டு விட்டன.