திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.206.54 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில் உலக அளவில் தமிழகம் முன்னிலை பெறுவதற்காக தொடர்ந்து பாடுபடுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதல் குடிநீர் கிடைக்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்’ என்றும் முதல்வர் தெரிவித்தார்.