புதுச்சேரியில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி மீது, டிப்பர் லாரி பக்கவாட்டில் அதிவேகமாக மோதியதில், ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கடலூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பிற்கு வந்த போது, அபிஷேகப்பாக்கத்தில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று பக்கவாட்டில் மோதியதில் ஜல்லி லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த ஜல்லிகள் சாலையில் சிதறிய நிலையில், ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். எதிரே வாகனம் வருகிறதா என்பதை கவனிக்காமல் டிப்பர் லாரி வளைவில் திரும்ப முயன்றதால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்தவுடன் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.