வெண்டைக்காயை பாதியாக கீறி தண்ணீரில் ஊறவைத்து… சுகர் பேஷண்ட்ஸ் இந்தக் கோடையில் இதை ட்ரை பண்ணுங்க!

Tamil Lifestyle Update : காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது இவற்றை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது சமையல் செய்தோ சாப்பிடும்போது உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. இதில் பச்சையாக சாப்பிடும் அளவுக்கு உள்ள வெண்டைக்காய் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது

வெண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

கோடை காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விதத்தில் வெண்டைக்காய் நமக்கு கோடைகால உணவாக பயன்படுகிறது. இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் உடலை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அடக்கியுள்ளது..

இதில் வெண்டைக்காய் அளவு வெண்டைக்காய் வாட்டர்  மனித உடலுக்கு சமமாக நன்மை தரும். நிபுணர்களின் கூற்றுப்படி, வெண்டைக்காய் வாட்டர் இரத்த சர்க்கரை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

நீரிழிவு நோயில் வெண்டைக்காயின் நன்மை

வெண்டைக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி நீரிழிவு நரம்பியல் நோயின் முன்னேற்றத்தைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றான ஹோமோசைஸ்டீனின் அளவைக் குறைக்கிறது.

மேலும், வெண்டைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது

வெண்டைக்காய் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது, மேலும் இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டின் சிறந்த மூலமாக உள்ளதால், அதிக நன்மைகள் கொடுக்கும். மேலும்  நார்ச்சத்து முறிவதற்கு அதிக நேரம் எடுக்கும், இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவுகிறது.

வெண்டைக்காய்மற்ற நன்மைகள்

ஓக்ராவும் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் குறைந்த ஜி.ஐ கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீரிழிவு சங்கம் கூட நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு பாதுகாப்பான உணவாக பரிந்துரைத்துள்ளது..

வெண்டைக்காய் வாட்டர் செய்வது எப்படி?

4-6 வெண்டைக்காய்களை எடுத்து நன்கு கழுவவும். அடுத்து, காய்களின் முனைகளை வெட்டி, கத்தியின் உதவியுடன் காய்களை இரண்டு பகுதிகளாகப் வெட்டவும். ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதில் காய்களைப் போடவும். காய்களை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காய்களை தண்ணீரில் பிழிந்து எடுத்தால் வெண்டைக்காய் வாட்டர் தயார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.