சென்னை 2வது விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களில் ஆய்வு!

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, பன்னூர் மற்றும் பாரந்தூர் ஆகிய இரண்டு தளங்களில் தடைகள் உள்ளதால், தடைகளை கட்டுப்படுத்தும் மேற்பரப்பு ஆய்வு (Obstacle Limitation Surface Survey) நடத்தப்பட வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த ஆய்வுக்கு பிறகு, தளத்தைச் சுற்றியுள்ள தடைகள், செயல்பாடுகளின் சாத்தியக்கூறுகளை சரிபார்த்து,  இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தை அதிகாரிகள் இறுதி செய்ய முடியும்.

மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“பரந்தூர் மற்றும் பண்ணூரில் இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) கண்டறிந்துள்ளது, இவை ஒப்பீட்டளவில் இயற்கை தடைகள் இல்லாதவை என்பதால், வான்வெளி இருப்புக்கு (air space) ஏற்ப விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் சாத்தியமானதாக உள்ளது.

இருப்பினும், மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் தளங்களில் உள்ளன, அதே போல் ஏரிகள் மற்றும் புகை உற்பத்தி செய்யும் தொழில்கள் போன்ற சில ஆபத்துகளும் உள்ளன. விமான நிலையச் செயல்பாடுகளைப் பொறுத்தமட்டில், தடைக்கட்டுப்பாட்டு மேற்பரப்பு ஆய்வு மற்றும் தள ஆய்வுக்குப் பிறகுதான் அதன் தீவிரத்தை அறிய முடியும்.

இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த பிப்ரவரி 15 முதல் 17ம் தேதி வரை 4 இடங்களை ஆய்வு செய்து, பாரந்தூர் மற்றும் பன்னூரை தேர்வு செய்து அதற்கான முன் சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு (டிட்கோ) அனுப்பியது.

இப்போது, ​​ தள ஆய்வுக்குப் பிறகு, டிட்கோ மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் மீண்டும் ஒருமுறை சந்தித்து பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம், இணையான டாக்ஸி பாதை அமைத்தல், டெர்மினல், சரக்கு கட்டிடங்கள் மற்றும் பிற திட்டப்பணிகள் போன்ற விமானம் மற்றும் நகர விரிவாக்கப் பணிகளுக்காக  633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மாநில அரசு இதுவரை 528.65 ஏக்கரை இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்கியுள்ளது, மீதமுள்ள 104.52 ஏக்கர் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று அந்த கடிதத்தில் சிந்தியா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.