யாழ். கடைக்காடு மற்றும் கெவில் பொதுப் பிரதேசங்களில் உள்ள வறுமையான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சம வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின், 55 வது படைப் பிரிவினர் தென்னிலங்கையினரின் நிதியுதவியுடன் ஓய்வு ,பொழுதுக்கு மற்றும் வாசிப்பு வசதியுடன் கூடிய சிறுவர் பூங்காவை நிர்மாணித்தனர்.
‘சிறுவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நிதி உதவிகளை வழங்கிய திரு பியதாச கமகே மற்றும் திரு துஷார அமரசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பூங்கா சிறுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்னவின் அழைப்பின் பேரில் யாழ் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு செவ்வாய்க்கிழமை (26) திறந்து வைத்தார். இப்புதிய சிறுவர் பூங்காவில் 6 விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பூங்காவிற்கு சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடிய நூலகமும் அமைந்துள்ளது.
பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதேவேளையில், ‘இதயம் உள்ள இராணுவம்’ என்ற வகையில் ஏற்கனவே குடாநாட்டு பிள்ளைகள் மற்றும் வறிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத் திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள்,படையினர் மற்றும் சிறுவர்கள்,சிறுவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவம்