பீஜிங்:
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங் ஷா நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் 23 பேர் சிக்கியுள்ளனர். சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 39 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து பற்றி தகவலறிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் கட்டிடத்தில் சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கட்டிட விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
தற்போது வரையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்
இதையும் படியுங்கள்…அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி