ங்கம் விலை இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது வாரமாகக் குறைந்துள்ளது. இந்த வார சரிவு என்பது செப்டம்பர் 2021க்குப் பின் பதிவான மிகப்பெரிய மாதாந்திர சரிவாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இனி வரும் காலக்கட்டத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தங்கம் விலை ஏப்ரலில் 1.7% வீழ்ச்சி.. இது வாங்க சரியான வாய்ப்பா.. இன்று குறைந்திருக்கா?
எம்சிஎக்ஸ் சந்தை விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) ஜூன் ஒப்பந்தத்திற்கான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 51,760 ஆக இருந்தது. இதேபோல் வெள்ளி ஒரு கிலோ 0.64 சதவீதம் சரிந்து 63,505.00 ரூபாயாக உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1917 டாலர் வரையில் உயர்ந்து அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தின் போது 1895 டாலராகச் சரிந்தது. கமாடிட்டி சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, மஞ்சள் உலோகத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், அதிகரித்து வரும் டாலர் குறியீடு தான் எனக் கூறுகின்றனர்.
டாலர் குறியீடு
டாலர் குறியீடு வாரம் முழுவதும் 100க்கு மேல் இருந்ததால், அமெரிக்க டாலர் (USD) 20 ஆண்டு உச்சத்தை எட்டியது. இது தவிர, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வரவிருக்கும் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இது தங்கம் விலை உயர்வுக்கு முக்கியத் தடையாகச் செயல்படுகிறது.
முக்கியத் தாக்கம்
ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாவது மாதத்திற்குள் நுழைகிறது, பொருட்களின் விலை உயர்வு, அக்ஷய திருதியை, மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்திற்கான தேவையை அதிகரித்து வரும் திருமணச் சீசன் ஆகியவற்றுக்கு மத்தியில் தங்கத்தின் விலை சரிவு என்பது தங்கம் வாங்குவோருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை
- சென்னை – ₹49,030 ரூபாய்
- மும்பை – ₹48,400 ரூபாய்
- டெல்லி – ₹48,400 ரூபாய்
- கொல்கத்தா – ₹48,400 ரூபாய்
- பெங்களூர் – ₹48,400 ரூபாய்
- ஹைதராபாத் – ₹48,400 ரூபாய்
- கேரளா – ₹48,400 ரூபாய்
- புனே – ₹48,480 ரூபாய்
- வதோதரா – ₹48,480 ரூபாய்
- அகமதாபாத் – ₹48,460 ரூபாய்
- ஜெய்ப்பூர் – ₹48,550 ரூபாய்
- லக்னோ – ₹48,550 ரூபாய்
- கோயம்புத்தூர் – ₹49,030 ரூபாய்
- மதுரை – ₹49,030 ரூபாய்
- விஜயவாடா – ₹48,400 ரூபாய்
- பாட்னா – ₹48,480 ரூபாய்
- நாக்பூர் – ₹48,480 ரூபாய்
- சண்டிகர் – ₹48,550 ரூபாய்
- சூரத் – ₹48,460 ரூபாய்
- புவனேஸ்வர் – ₹48,400 ரூபாய்
- மங்களூர் – ₹48,400 ரூபாய்
- விசாகப்பட்டினம் – ₹48,400 ரூபாய்
- நாசிக் – ₹48,480 ரூபாய்
- மைசூர் – ₹48,400 ரூபாய்
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை
- சென்னை – ₹53,490 ரூபாய்
- மும்பை – ₹52,800 ரூபாய்
- டெல்லி – ₹52,800 ரூபாய்
- கொல்கத்தா – ₹52,800 ரூபாய்
- பெங்களூர் – ₹52,800 ரூபாய்
- ஹைதராபாத் – ₹52,800 ரூபாய்
- கேரளா – ₹52,800 ரூபாய்
- புனே – ₹52,880 ரூபாய்
- வதோதரா – ₹52,880 ரூபாய்
- அகமதாபாத் – ₹52,860 ரூபாய்
- ஜெய்ப்பூர் – ₹52,950 ரூபாய்
- லக்னோ – ₹52,950 ரூபாய்
- கோயம்புத்தூர் – ₹53,490 ரூபாய்
- மதுரை – ₹53,490 ரூபாய்
- விஜயவாடா – ₹52,800 ரூபாய்
- பாட்னா – ₹52,880 ரூபாய்
- நாக்பூர் – ₹52,880 ரூபாய்
- சண்டிகர் – ₹52,950 ரூபாய்
- சூரத் – ₹52,860 ரூபாய்
- புவனேஸ்வர் – ₹52,800 ரூபாய்
- மங்களூர் – ₹52,800 ரூபாய்
- விசாகப்பட்டினம் – ₹52,800 ரூபாய்
- நாசிக் – ₹52,880 ரூபாய்
- மைசூர் – ₹52,800 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
- சென்னை – ₹69500.00 ரூபாய்
- மும்பை – ₹63500.00 ரூபாய்
- டெல்லி – ₹63500.00 ரூபாய்
- கொல்கத்தா – ₹63500.00 ரூபாய்
- பெங்களூர் – ₹69500.00 ரூபாய்
- ஹைதராபாத் – ₹69500.00 ரூபாய்
- கேரளா – ₹69500.00 ரூபாய்
- புனே – ₹63500.00 ரூபாய்
- வதோதரா – ₹63500.00 ரூபாய்
- அகமதாபாத் – ₹63500.00 ரூபாய்
- ஜெய்ப்பூர் – ₹63500.00 ரூபாய்
- லக்னோ – ₹63500.00 ரூபாய்
- கோயம்புத்தூர் – ₹69500.00 ரூபாய்
- மதுரை – ₹69500.00 ரூபாய்
- விஜயவாடா – ₹69500.00 ரூபாய்
- பாட்னா – ₹63500.00 ரூபாய்
- நாக்பூர் – ₹63500.00 ரூபாய்
- சண்டிகர் – ₹63500.00 ரூபாய்
- சூரத் – ₹63500.00 ரூபாய்
- புவனேஸ்வர் – ₹63500.00 ரூபாய்
- மங்களூர் – ₹69500.00 ரூபாய்
- விசாகப்பட்டினம் – ₹69500.00 ரூபாய்
- நாசிக் – ₹63500.00 ரூபாய்
- மைசூர் – ₹69500.00 ரூபாய்
Is good time buy gold at USD at 20-year high; Check chennai, coimbatore, madurai gold price
Is good time buy gold at USD at 20-year high; Check chennai, coimbatore, madurai gold price 20 வருட உயர்வில் டாலர் இன்டெக்ஸ்.. தங்கம் வாங்கலாமா..? சென்னை, கோவையில் என்ன விலை..!