பீகாரில் அமரர் ஊர்தி வழங்கப்படாததால் முதியவர் ஒருவர், தனது உறவினரின் உடலை பல கிலோ மீட்டர் சுமந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
நவாடா மாவட்ட மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழக்க, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை. அதனால், அவருடன் இருந்த முதியவர், உடலை தோளிலேயே சுமந்து வீட்டிற்கு நடந்துச் சென்றார். அதன் பின் ஆட்டோ உதவியுடன், உடல் கொண்டு செல்லப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM