சென்னை: சிங்கப்பூரில் உள்ள தொங்கு பாலத்தை மாதிரியாக வைத்து சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் தொங்கு பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி உள்ளது. 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை மறு சீரமைப்ப செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி ஏரியை ஏற்றி நடைபயிற்சி செய்ய வசதி, குழந்தைகள் பூங்கா, குழந்தைகளுக்கான ரயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், திறந்தவெளி திரையரங்குகள், எல்.ஈ.டி. விளக்குகள் ஆகிவைகள் அமைக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்லும் வகையில் 250 அடியில் தொங்கு பாலம் ஒன்றை அமைக்கப்பட்ட வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள தொங்கு பாலத்தை மாதிரியாக கொண்டு இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் இரு கரைகளிலும் தண்ணீருக்கு மிக அருகில் உணவகங்கள் அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பாலத்தில் இருந்து கீழே இறங்கி உணவகத்தில் உணவு அருந்து வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொங்கு பாலம் நடைபாதை முழுவதும் கண்ணாடியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதன் மேலே நடந்து செல்லும் போது தண்ணீரை ரசித்துக்கொண்ட செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலப் பணிகள் அனைத்து நிறைவுபெற்று வண்ணம் பூசும் பணிகள் மட்டும் மீதம் உள்ளது.
இந்தப் பாலம் பொதுமக்களிடம் பயன்பாட்டு வந்தால் சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலம், கத்திபாரா மேம்பாலங்களின் வரிசையில் வில்லிவாக்கம் தொடங்கு பாலமும் சென்னையில் அடையாளங்களாக மாறும்.
வீடியோ வடிவில் காண…