வேலை,கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி-செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய சில்வண்டு..!

சேலத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் முத்ரா கடன் பெற்றுத் தருவதாகவும் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அன்னதானப்பட்டியைச் சேர்ந்த மலர் என்ற பெண், இணையதளம் மூலம் வேலை தேடி வந்துள்ளார். டி.எம். இந்தியா குரூப்ஸ் (TM INDIA GROUPS) என்ற பெயரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்த எண்ணுக்கு அழைத்தபோது, சசிக்குமார் என்ற நபர் பேசியுள்ளான். தங்களது நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் மேலும் பலரை சேர்த்துவிடும்படியும் அவன் கூறியதை நம்பி மலர் தனது நண்பர்களுக்கும் சசிக்குமாரின் தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளார்.

அனைவரிடமும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட சசிக்குமார், கொரோனா காரணமாக தற்காலிகமாக வேலை இல்லை என்றும் அதற்கு பதிலாக முத்ரா கடன் பெற்றுத் தருகிறேன் என்றும் கூறி, அத்தனை பேரிடமும் சுமார் 2 லட்ச ரூபாய் வரை முன்பணம் பெற்றுள்ளான்.

ஆனால் வேலையோ, கடனோ வாங்கித் தராமல் அலைக்கழித்ததால், பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். செல்போன் சிக்னலை வைத்து, கொண்டலாம்பட்டி பகுதியில் வைத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.