Labour Day 2022: ஒரு தொழிலாளி ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து!

Every year on May 1, International Workers Day also known as Labour Day, Labour Day is celebrated throughout India under a variety of Titles- மே 1 என்பது சர்வதேச தொழிலாளர்கள் தினம். உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினம். இந்த நாள் தொழிலாளர்களைக் கொண்டாடுகிறது மற்றும் அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புடன் இருக்க அவர்களை ஊக்குவிக்கிறது.

இந்த நாளில், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், சுரண்டலில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும், உலகெங்கிலும் உள்ள மக்கள் அணிவகுப்புகளை நடத்துகின்றனர். சர்வதேச தொழிலாளர் தினம் என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.

மே தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்மயமாக்கலின் போது, ​​ அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கம்’ தொழிலதிபர்களால் சுரண்டப்பட்டது மற்றும் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை வேலை செய்யும்படி கட்டாயபடுத்தியது. இதனால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிகாகோவில் 1886இல் ஹேமார்க்கெட் எனுமிடத்தில்’ எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் சங்கத்தினர் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், இந்த வேலைநிறுத்த போராட்டம் பயங்கர குண்டுவெடிப்புகளை சந்தித்தது, இது பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொழிலாளர் இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை அளித்ததாக நம்பப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து’ 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ சிகாகோவின் தேசிய மாநாட்டில்’ எட்டு மணிநேரத்தை சட்டப்பூர்வ வேலை நேரம் என அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பல நாடுகள் எட்டு மணி நேர வேலை கொள்கையை ஏற்றுக்கொண்டன.

இந்தியாவில், முதல் தொழிலாளர் தினம் 1923 இல் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை இந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சி அனுசரித்தது. இந்த நாளில், கம்யூனிஸ்ட் தலைவர் மலையபுரம் சிங்காரவேலு செட்டியார், தொழிலாளர்களின் உழைப்பை குறிக்கும் வகையில் மே 1ஆம் தேதியை தேசிய விடுமுறையாகக் கருத வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நாள் இந்தியாவில் கம்கர் திவாஸ், கம்கர் தின் மற்றும் அந்தரராஷ்டிரிய ஷ்ராமிக் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவில், தொழிலாளர் தினம் செப்டம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர் தின வாழ்த்துகள் மற்றும் படங்கள்!

எல்லா செல்வங்களும் உழைப்பின் விளைபொருளாகும்.

உங்களைப் போன்ற தொழிலாளர்கள் இல்லாமல் நாடு பிரகாசிக்காது. உங்களுக்கு இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். நமது தேசத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்

ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு எங்கள் பாராட்டுகளையும் மரியாதையையும் அனுப்புகிறோம். சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

உங்களையும் உங்கள் கடின உழைப்பையும் கௌரவிக்க ஒரு நாளை சேமிப்போம். உங்கள் தொழிலாளர் தினத்தை கொண்டாடுங்கள்.

கடின உழைப்பு உங்களை ஒருபோதும் தோற்கடிக்காது. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

ஒரு தொழிலாளி ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

*எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும், ஒரு மனிதன் கவனம் மற்றும் உறுதியுடன் இருந்தால், அவன் தோல்வியடைய வாய்ப்பில்லை. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.