உக்ரைனின் புச்சா நகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட 3 உக்ரைனியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பிப்ரவரி 24-ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அதிகப்படியான போர் குற்றங்களை செய்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய போர்க் குற்றச் சாட்டுகளுக்கு ஒத்ததாக மாறிவிட்ட உக்ரைனின் புச்சா நகரத்தில் ஏப்ரல் 29 அன்று ஒரு குழியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்தனர்.
“பாதிக்கப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவர்களின் கண்கள் துணியால் மூடப்பட்டிருந்தன, வாய்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன, அத்துடன் உடலின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் உள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடக்கும் புடின்! நோய் தான் காரணமா?
ஒரு மாத கால ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேறிய பின்னர், ஏப்ரல் தொடக்கத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் உடையில் சில உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, புச்சா உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
அதன்பிறகு, அங்கும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கீவ் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 1,202 பேர் ஆகும்.
“பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், உடல்களில் தோட்டாக் காயங்கள் காணப்பட்டன. இறுதியாக, ஒவ்வொரு ஆண்களும் காதில் சுடப்பட்டனர்” என்று Kyiv நகரத்தின் பிராந்திய காவல்துறைத் தலைவர் Andriy Nebytov அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ‘தல’ தோனி! ரசிகர்கள் மகிழ்ச்சி…