சிறந்த விளையாட்டு வீரரும் எழுத்தாளருமான கந்தையா சிங்கம்
என்பவரது “நடந்து வந்த பாதையிலே “ என்னும் நூல் வெளியீடானது
கடந்த வாரம் பிரித்தானியா, ஈலிங் சிறி கனக
துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் எழுத்தாளர் இரா.உதயணன்
தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. .
திரு இரா உதயணன்
அவர்கள் தனது உரையில், நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் படைக்கவேண்டும் என்றும், நாவல், சிறுகதை எழுதுவதற்குரிய தகுதி
இருப்பதை சுட்டிக் காட்டினார்.
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவை, உலகத் தமிழர் புகைப்படப் பேரவை,
மற்றும் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை இணைந்து இவ்விழாவினை சிறப்புற ஒழுங்கமைத்திருந்தது.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, கலாநிதி அகளங்கன் எழுதிய
தமிழ்த்தாய் வாழ்த்துதினை அழகாக செல்வி ஆயகி தவராசகுமாரன்
இசைத்தார்.
இந்நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கியவர் நாகலிங்கம் விஜயகுமார். (தலைவர், வவுனியா த.ம.ம.வி. இலண்டன்
கிளை).
வரவேற்புரையை திரு சேனாதிராஜா தனஞ்செயன் நிகழ்த்த, ஆலய
பிரதம குருக்கள் ஆசியுரை வழங்கினார். ஈலிங் துர்க்கையம்மன் ஆலயத்
தலைவர் சொக்கலிங்கம் கருணலிங்கம் அவர்களின் ஆசியுரையைத்
தொடர்ந்து வாழ்த்துரை சுப்ரமணியம் சுதர்சன் (IBC நெறியாளர்), திருமதி
திருமகள் சிறிபத்மநாதன் (ஆசிரியர் , கவிஞர்) ஆகியோர் வழங்கினார்கள்.
சிறப்புரையாக யோகா நேசராஜன் (Access Direct)
அவர்களின் ஜனரஞ்சிதமான உரை இடம் பெற்றது.
இவ்விழாவின் பிரதம விருந்தினராக கலாநிதி சோதிநாதன்
ஆனந்தவிஜயன் (சிரேஷ்ட மருத்துவ விஞ்ஞானி, Editor in chief,Confluence
South Asian perspectives,Magazine) கலந்து சிறப்பித்தார்.
அவர் தனதுரையில்,
இந்த நூல் சுயசரிதை வடிவத்தில் இல்லாமல் ஒரு வித்தியாசமான
முறையில் எழுதப்படுத்திருப்பதை சுட்டிக் காட்டினார்.
நூல் அறிமுகத்துடன் நூல் வெளியீட்டினை திருவாளர் தங்கராசா
ரஜீந்திரகுமார் (எழுத்தாளர், கவிஞர்) நிகழ்த்தி இருந்தார்.
அவர் தனதுரையில் இந்த நூல் தமிழர்களால் பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்
என்றும் நூலினை கையில் எடுத்தால் கீழே வைக்க மனமின்றி வாசிக்கத்
தூண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்புரையை நூலாசிரியர் திரு கந்தையா சிங்கம் நிகழ்த்தினார்.
செல்வி
அனன்யா ரஜீந்திரகுமாரின் பேச்சினைத் தொடர்ந்து இவ் விழாவில்
திரு. ஞானசேகரன் ஜெயக்குமார் (தலைவர் WTPF) திரு. தர்மரட்ணம்
ரகுராஜ் (தலைவர் WTCF) திரு.பாலசுப்ரமணியம் திருமாறன் (தலைவர்
WTBF UK Branch) கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன், பிரதம
விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களுக்கு பொன்னாடை
போர்த்திக் கௌரவம் செய்யப்பட்டது.
திருமதி சுகுணா சுதாகரனின் (பிரித்தானியா ஆசிரியர், கவிஞர்)
நன்றியுரையுடனும் சிறந்த நேர முகாமைத்துவத்துடனும் விழா இனிதே
நிறைவடைத்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்
கல்விமான்கள் என மண்டபம் நிறைந்திருந்தமையை அவதானிக்க
முடிந்தது.