வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லி: 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை பலப்படுத்தியவர் நரவானே என ராஜ்நாத் சிங் அவரது பதவி நிறைவு விழாவில் புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ பணியாளர்கள் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் நரவானேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரிவு உபசார விழா ஒன்றில் கலந்து கொண்டார். மேலும் புதிதாக அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெனரல் மனோஜ் பாண்டேவை வரவேற்றார்.
மேலும் நரவனே குறித்து பேசிய ராஜ்நாத் சிங் கடந்த 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் அவர் ஆற்றிய சேவை காரணமாகிய இந்திய பாதுகாப்பு மேம்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். நரவனே ஓய்வு பெறுவதை அடுத்து ‘காட் ஆஃப் ஹானர்’ என்கிற விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்திய ராணுவத்தின் தெற்கு பிளாக்கில் நடைபெற்ற இந்த விழாவில் மனோஜ் பாண்டே புதிய தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
Advertisement