வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, தன் சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என, பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ‘இதற்குக் காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தவறான நிர்வாகம்’ எனக் கூறும் பொதுமக்கள், அவர்கள் பதவி விலக வலியுறுத்தி, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், போராட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, அரசு நிர்வாகத்திலிருந்து சகோதரர்களை ‘கழற்றி’ விடுவதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சாஜித் பிரேமதாசா கூறியது, வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக பிற எதிர்கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.
Advertisement