'இந்தி திணிப்பை ஏற்க முடியாது; தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது' – ப.ரஞ்சித் பேட்டி

‘தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ப.ரஞ்சித்.  

நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட  இயக்குனருமான ப.ரஞ்சித், ‘புதிய தலைமுறை’ செய்தியாளர் கணேஷ் குமார் நடத்திய கலந்துரையாடலுடன் போது கூறியதாவது:-

ஓடிடி தளம் குறித்து..

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இலக்கணம் சார்ந்த ஆர்வம் அதிகளவில் உள்ளது. கலைத்துறை எல்லோருக்கமான துறையாகவே இருந்து வருகிறது. ஓடிடி தளம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கான தளமாக இல்லை. பெரிய அளவிலான படத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் சிறிய அளவிலான திரைப்படங்களுக்கு ஓடிடியில் கிடைப்பதில்லை.

கேஜிஎஃப், பாகுபலி வெற்றி, பான் இந்தியா படங்கள் குறித்து..

பாகுபலி, கேஜிஎப் போன்ற இந்தியா பேன் திரைப்படங்கள் என்பது ஒரு சீசன் மட்டுமே, கதாநாயகனை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். மற்ற எல்லா சினிமாக்களை விட தமிழ் சினிமா தொழில்நுட்பம், கதைகள் உள்ளிட்ட  அனைத்து நிலைகளிலும் தரமானதாக உள்ளது.

image

மொழித்திணிப்பு குறித்து..

மொழித் திணிப்பு என்பதை ஒரு காலமும் ஏற்க முடியாது. ஹிந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக வேலை வாய்ப்போ சினிமாவை எடுக்க முடியவில்லை என்ற நிலையை ஏற்படுத்தவில்லை. எனது திறமை ஹிந்தியை காட்டிலும் மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது. இந்தியாவின் முக்கிய மொழியாக அங்கீகரிப்பதோ, ஹிந்தியை பேச வேண்டும் என்ற திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அதற்கான தேவையும் இல்லை.

மொழி குறித்து சமீபகால உரையாடல் குறித்து..

வட இந்தியர்கள் தென் இந்தியர்களை அடையாளப்படுத்தும் விதமே சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது, அந்த குணங்களின் அடிப்படையில் தேசமாக ஒன்றினைந்துள்ளோம். தேசத்தின் ஒற்றுமை மொழியால் வேறுபடுத்தி பார்க்க கூடாது. தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். அது அவர்களின் விருப்பம்” என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.