Ajith : "ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்" – அஜித் குமார் நேர்காணல் (Vikatan Originals)

அஜித் குமார் இந்திய அளவில் கவனிக்கப்படும் திரைக்கலைஞர். அமராவதி படம் தொடங்கி வலிமை வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்து தனக்கென குறிப்பிட்ட இடத்தை தக்க வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை தல என அடைமொழியிட்டு அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அஜித்தின் முடிவுகள் அனைத்தும் திரைத்துறையைத் தாண்டியும் ஆச்சர்யம் ஏற்படுத்துபவை. பல வருடங்களாகவே அஜித் ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. 2012-ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் இதோ

‘படம் வெளியாகி முதல் ஷோ முடிவதற்குள்ளேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பிடுதே?”

அஜித் – ஷாலினி

”என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க… பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு… அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!”

”இத்தனை வருஷத்தில் இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் உங்க ரசிகர்களின் எண்ணிக்கை குறையலையே?”

அஜித்

”எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்… தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க. உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தா வது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்… வாழு… வாழவிடு!”

முழுமையான நேர்காணலைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…. நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.