கவுகாத்தி:
இந்தியாவில் ரெயில்களில் பயணம் செய்வோர் டிக்கெட் இன்றி பயணம் செய்வது, முறையற்ற டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுக்காமல் இருப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் சேர்த்த தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்த நிலையில், வடகிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் இருந்து ஓராண்டில் ரூ.23.36 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரையில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 392 பயணிகள் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் அல்லது முறையற்ற டிக்கெட் வைத்திருந்ததற்காக கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி வடகிழக்கு ரெயில்வேயின் சி.பி.ஆர்.ஓ. சபியாசச்சி டே கூறும்போது, ரெயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை கவனிக்கும் வகையில் எங்களது ரெயில்வே நிர்வாகம் சீராக பயணிகளிடம் சோதனை நடத்தி வருகிறது.