சிலி நாட்டில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நள்ளிரவில் தென்பட்டது. இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடந்ததால் இந்தியாவில் காணமுடியவில்லை.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கிய சூரிய கிரகணம் அதிகாலை, 4:08 மணி வரை நீடித்தது. அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டது.
இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25ந்தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் தெரியாது.