1820-களில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரின் இயந்திர தொழிலார்களினால் உருவான சங்கம் தான் உலகின் முதல் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.
1820-30களின் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை `10 மணி நேர வேலை’ என்பது மட்டுமே.
“8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு” என்ற முதல் முழக்கத்தை 1950-களில் ஆஸ்திரேலியாவின் கட்டட தொழிலாளர்களே முன்வைத்தனர்.
1980-களில் அமெரிக்க தொழிற்சங்கங்கள், ஒன்றிணைந்து `8 மணி நேர இயக்கம்’ என்ற அமைப்பாக திரண்டனர்.
முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு எதிரான முதல் போராட்டத்தை1886, மே 1 அன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் `8 மணி நேர இயக்கத்தினர்’ நடத்தினர்.
தொழிலாளர்களின் இத்தகைய எழுச்சியின் ஓர் கட்டிலடங்கா தீப்பொறியாக விளங்கியது, மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் எழுதிய `பொதுவுடைமை அறிக்கை’ என்பது மறுப்பதற்கில்லை.
1891-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் இன்டர்நேஷனலின் தீர்மானத்தின்படி, மே 1-ம் நாள் சிகாகோ போராட்டத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது
`நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சி உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும்’ – எங்கெல்ஸ்
உலகளவில் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் மே 1-ஐ உழைப்பாளர் தினமாக கொண்டாடுகின்றன.
அமெரிக்கா மற்றும் கனடாவில், செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம் முதன்முதலாக 1923-ல் சென்னையில் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது.
சென்னை மெரினா கடற்கரையில் கம்பீரமாய் நிற்கும் உழைப்பாளிகள் சிலை 1958-ல் நிறுவப்பட்டது.
2019-ன் இறுதியில் உலகை அச்சுறுத்த தொடங்கிய கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கின்போது கூட மக்களுக்காக துயரறியாது உழைத்தனர் நம் தொழிலாளர்கள்.
`அடிமை வர்க்கம் இல்லை யென்றெழுந்திடவே
பல்தொழில் செய்திடும் பாமரனே
உன்வியர்வையில் செழுத்திடும் மண்மீதினில்
அதிகாரமும் உந்தன் கைகளில் சேர்ந்திட
முழக்கமிட்டு இந்த தினத்தை போற்றிடுவோம்’