திருவனந்தபுரம்:
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது.
சுங்க துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கரிப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வளைகுடா நாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்து இறங்கி வந்த தம்பதி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக 1.17 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.3.28 கோடி ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான இருவரும் பெருந்தலமன்னாவை சேர்ந்த அப்துசமது (வயது 47) அவரது மனைவி சப்னா(34) என தெரியவந்தது. அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.