நெல்லை: நெல்லை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பள்ளக்கால் புதுக்குடி கிராம மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா பாக்கியமேரி, தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவ நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.எப்ரல் 25ல் நடந்த மோதலில் படுகாயமடைந்த செல்வசூர்யா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவர் கொலை தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.