FSB தலைவரின் கீழ் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் புடின்: ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு தகவல்!


ரஷ்ய ஜனாதிபதி புடின் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது அவரது ஆட்சி அதிகாரத்தை முன்னாள் FSB தலைவரான நிகோலாய் பட்ருஷேவ் கீழ் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாடிபதி புடினின் உடல்நிலை மிகவும் நழிவடைந்து இருப்பதை அவரின் சமீபத்திய வெளிதோற்றங்கள் அம்பலபடுத்தியுள்ளன.

இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் வயிற்றுப் புற்றுநோய், பார்கின்சன் மற்றும் ‘ஸ்கிசோஃப்ரினிக் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏப்ரல் இரண்டாம் பாதியில் திட்டமிடப்பட்ட அவரின் அறுவை சிகிச்சைகள் உக்ரைன் போரின் நீட்டிப்பு காரணமாக அவை தாமதமானதாகவும் ரஷ்யாவின் உள் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது புடினின் அறுவைச் சிகிச்சை திகதிகள் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் குறிப்பிட்ட அவசரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் அதையும் தாமதப்படுத்த முடியாது எனவும் உள் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

புடினின் இந்த அறுவைச் சிகிச்சை காலங்களில் ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை முன்னாள் FSB தலைவரான நிகோலாய் பட்ருஷேவ் கீழ் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இவர் ரஷ்யா உக்ரைன் போரில் ராஜதந்திர முடிவுகளின் முக்கிய சிற்பியாகவும், உக்ரைன் தலைநகர் கீவ் நவ நாஜிகளால் அலைக்கழிக்கப்பட்டுகிறது என ஜனாதிபதி புடினை நம்பவைத்தவர் என தெரிவிக்கின்றனர்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் மீண்டும் அமையும் பிரித்தானிய துதரகம்: லிஸ் டிரஸ் வரவேற்பு!

ஜனாதிபதி புடின் தனது அறுவைச் சிகிச்சையின் போது ஆட்சி அதிகாரத்தை மாற்ற விரும்பமாட்டார் என்றாலும், அதிகாரம் மாற்றப்பட்டால் அது முன்னாள் FSB தலைவரான நிகோலாய் பட்ருஷேவ்-வின் கீழ் அளிக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக ரஷ்யவின் உள் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.