சஹரன்பூர் : ”யோகாவுக்கு சில நாடுகள் காப்புரிமை பெற விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
யோகா கலை, இப்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. அதனால் யோகாவுக்கு காப்புரிமை பெற சில நாடுகள் விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது; அதில் நாம் உறுதியாக இருக்க வேணடும். மற்ற நாடுகளில் உடல் ரீதியான அறிவு மட்டுமே உள்ளது. ஆனால் பாரதத்தில் மட்டுமே ஆன்மிக அறிவு உள்ளது. அதை கற்றுக்கொள்ள இந்தியாவை நோக்கி வெளிநாட்டினர் வருகின்றனர்.யோகா பயிற்சியால் அறிவின் உச்ச நிலையை அடையலாம். யோகா பயிற்சியால் தான் நம் ரிஷிகள் அறிவில் சிறந்து விளங்கினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சஹரன்பூர் : ”யோகாவுக்கு சில நாடுகள் காப்புரிமை பெற விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.உத்தர பிரதேச மாநிலம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.