ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த காரணமாக இருந்த லாட்ஜ் மேலாளர் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.
இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்த லாட்ஜ் உரிமையாளர் கந்தசாமி (45) என்பவரை சில நாட்களுக்கு முன்பே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உரிமையாளருக்கு உடந்தையாக இருந்த மேலாளர் தனவேல் (58), பாலச்சந்திரன் (23) மற்றும் வினோத் (29) ஆகிய 3 பேரையும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM