Tamil News Today Live: ஒரே நாளில் ரூ252.34 கோடிக்கு மது விற்பனை

Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாள்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா அப்டேட்

உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு. 46.70 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 62.60 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

மேம்பாலம் கட்டுமானப் பணியில் மீண்டும் விபத்து!

மதுரை புதுநத்தம் சாலையில் கடந்த ஆண்டில் விபத்து நிகழ்ந்த மேம்பாலம் கட்டுமானப் பணியில் மீண்டும் விபத்து. ராட்சத ஹைட்ராலிக் கிரேன் கம்பி அறுந்து விழுந்து 2 பேர் படுகாயம். கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனமே விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு!

ஜாக்குலின் சொத்துகள் முடக்கம்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் 7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம். 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.

Live Updates
11:56 (IST) 1 May 2022
நிலக்கரி தட்டுப்பாடு – மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து வர வேண்டிய சுமார் 12,000 டன் நிலக்கரி வரவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு!

11:41 (IST) 1 May 2022
நேற்று ஒரே நாளில் ரூ252.34 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ252.34 கோடிக்கு மது விற்பனை. இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ54.89 கோடிக்கும், சென்னை மண்டலத்தில், ரூ52.28 கோடிக்கும் மது விற்பனை

11:40 (IST) 1 May 2022
யூஜிசி- நெட் தேர்வுக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் யூஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2021 டிசம்பரில் நடத்தப்படவிருந்த நெட் தேர்வையும், 2022 ஜூனில் நடத்தப்படவுள்ள தேர்வும் ஒன்றாக நடக்கிறது. http://www.ugnet.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

11:20 (IST) 1 May 2022
நெல்லை மோதலில் மாணவர் உயிரிழப்பு – ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

நெல்லை அம்பை அருகே மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட். தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

11:17 (IST) 1 May 2022
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு

மனிதனை மனிதனே இழுத்த கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷாக்களை நடைமுறைப்படுத்தியது திமுக அரசு. இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது திமுக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10:58 (IST) 1 May 2022
இந்தியாவில் மேலும் 3,324 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மேலும் 3,324 பேருக்கு கொரோனா தொற்று. 40 பேர் உயிரிழப்பு . ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,876 பேர் குணமடைந்தனர். நாடு முழுவதும் 19,092 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல்

10:28 (IST) 1 May 2022
தஞ்சை தேர் விபத்து – 2ஆவது நாளாக விசாரணை

ஒருநபர் விசாரணை குழு அதிகாரி குமார் ஜெயந்த் நேரில் ஆய்வு. தேர் விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒரு நபர் குழு 2வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது

10:24 (IST) 1 May 2022
ஓ.பி.எஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!

நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது. தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. அதிமுக ஆட்சியில்தான் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

10:00 (IST) 1 May 2022
மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மே 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:37 (IST) 1 May 2022
தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்

தமிழக பாஜகவில் 25 மாவட்ட தலைவர்களை பொறுப்பிலிருந்து நீக்கினார் அண்ணாமலை. அமைப்புரீதியான 59 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

09:22 (IST) 1 May 2022
மே தின நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி. மே தின உறுதிமொழியை ஏற்றார் முதல்வர்.

09:05 (IST) 1 May 2022
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ரூ102.50 உயர்ந்து, ரூ2355.50 ஆக விற்பனை

08:51 (IST) 1 May 2022
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருத உறுதிமொழி – விசாரணைக்கு உத்தரவு!

மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில், வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மஹரிஷி சரக் சபாத் உறுதிமொழி ஏற்கப்பட்டதால சர்ச்சை. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ரத்னவேல் விளக்கமளிக்க மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவு

08:27 (IST) 1 May 2022
3 நாள்கள் வெளிநாடு செல்கிறார் மோடி

நடப்பாண்டில் முதல்முறையாக பிரதமர் மோடி நாளை வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு செல்கிறார்

08:13 (IST) 1 May 2022
12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டங்கள்; முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.