கனடாவில் லொட்டரியில் மிகப்பெரிய பரிசை வென்ற பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார்.
அல்பர்டாவை சேர்ந்த டெப்ரோ பிரவுன் என்ற பெண்ணுக்கு லொடோ மேக்ஸில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.
இதையடுத்து பார்ப்பவர்கள் குழம்பும்படி வேடிக்கையான முகபாவனைகளை செய்தார் பிரவுன்.
ஏனெனில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த மகிழ்ச்சியில் அப்படி செய்தார் அவர்.
பரிசு விழுந்ததை உறுதி செய்த பின்னர் நேராக காரில் உட்கார்ந்திருந்த மகளிடம் வந்தார் பிரவுன்.
ஏன் இப்படி கோமாளித்தனமாக வேடிக்கையாக பேசுகிறாய் என மகள் கேட்க தனக்கு லொட்டரியில் விழுந்த பரிசு குறித்து பிரவுன் கூறினார்.
அவர் பேசுகையில், உலகத்திற்கு வெளியே இருப்பது போல உள்ளது.
என் மகள் புது வாகனம் வாங்க பரிசு பணத்தில் இருந்து முதலில் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரவுன், தனது ஓய்வு காலத்தை புதிய வெற்றியுடம் சிறப்பாக வாழத் திட்டமிட்டுள்ளார்