மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக கூறப்படும் விவரத்தில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
சமஸ்கிரதத்தில் உறுதிமொழி சேர்த்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்கள் இப்போகிரெடிட் உறுதிமொழி ஏற்பு வழக்கமான நடைமுறையாகும்.
இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு புதிய மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இப்போகிரெடிட் முறைக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் என்ற சமஸ்கிருத உறுதிமொழியில் மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் தற்போது முதல்வர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.