உலகம் முழுவதும் இன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மே தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச தொழிலாளர் தினத்தில் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மேற்கு வங்க மாநிலத்திலும் உழைக்கும் சகோதர சகோதரிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அவர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி- கல்லூரி டீன் அதிரடி மாற்றம்