பஞ்சாபின் பாட்டியாலாவில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பார்ஜீந்தர் பர்வானா உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறைத் தலைவர் சினா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
அப்பாவிகள் யாரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். தேசவிரோத, சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பக்வந்த் மான் உத்தரவிட்டுள்ளதாகச் சினா தெரிவித்தார்.