சிவகளை கிராமத்தை தத்தெடுத்த கனிமொழி எம்.பி.- கிராம சபை கூட்டத்தில் அறிவிப்பு

செய்துங்கநல்லூர்:

மே தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில்
கனிமொழி
எம்.பி. கலந்து கொண்டார். முன்னதாக அவர் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை பார்வையிட்டார். பின்னர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

இன்று உழைப்பாளர்களுக்கான தினம். பெண்களுடைய உழைப்பு இல்லையென்றால் சமுதாயம் எந்தவித முன்னேற்றமும் அடையாது.

இந்த சமுதாயத்தில் முதுகெலும்பு உழைப்பாளிகள் தான். சிவகளை பெருமை மிகுந்த இடம். தமிழக மக்கள் பெருமை கொள்ள கூடியது இந்த சிவகளை. தமிழகத்தில் அகழாய்வு செய்ய ஏராளமான தடைகளை தாண்ட வேண்டிய உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆட்சி கஜானாவை காலி செய்து விட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றி வருகிறோம்.

முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய
கனிமொழி
எம்.பி. சிவகளை கிராமத்தை தத்தெடுப்பாக அறிவித்தார்.

ஏற்கனவே கடந்த 24ந்தேதி பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில்
கனிமொழி
எம்.பி. பங்கேற்றார்.

அப்போது கயத்தாறு தெற்கு இலந்தகுளம் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிவகளையை தத்தெடுத்துள்ளார்.

கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.