ரோகித் சர்மாவின் குணங்களை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி வருகிறார்- சுனில் கவாஸ்கர்

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் அறிமுக அணியான குஜராத் அணி நடப்பு தொடரில் 8-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அசத்தும் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 
அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ” ஹர்திக் பாண்டியா -விடம் நான் இப்போது பார்ப்பது தான் ரோஹித் ஷர்மாவுக்கு முதன்முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது நேர்ந்தது. 
ரோஹித் சர்மா 2013- ஆம் ஆண்டில் இது போன்ற 40கள், 50கள் மற்றும் 60கள் என ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்து வந்தார்.
அதுமட்டுமின்றி ரோஹித் ஷர்மா  மைதானத்தின் கவர்ஸ் மற்றும் கிளோஸ்-இன் திசையில் சிறந்த பீல்டராக இருந்தார். அது போலவே பாண்டியாவும் அந்த குணங்களை வெளிப்படுத்தி வருகிறார், அதனால்தான் குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ” என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.