மதுரை மாவட்டத்தில், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 100 சவரன் நகை திருடு போனதாக கூறப்படும் சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீரபஞ்சான் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அந்த நபர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் பின் பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், அது குறித்து முருகனுக்கு தகவல் அளித்துள்ளார்.
முருகன் வந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் நகை, 60,000 ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.