கீவ்,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் வீரர்கள் துளியும் அஞ்சாமல் ரஷியாவுக்குத் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது.
இந்த நிலையில், உக்ரைனில் மரியுபோல் நகர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கீவ் வாசிகள் போராட்டம் நடத்தினர்.
தங்கள் உறவுகள் மரியுபோலில் சிக்கி தவித்து வருவதாகவும், அந்நகர மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற சர்வதேச தலைவர்கள் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வீதிகளில் நின்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
நீண்ட காலம் போராடி ரஷிய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரை தன் வசம் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.