வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: தான் எவ்வாறு இடதில் இருந்து வலதுசாரி ஆனேன் என்று விளக்க, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கதில் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்தார். தற்போது இதனை இணையத்தில் விற்க அதனை வரைந்த ஓவியக் கலைஞர் முயன்று வருகிறார்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார். இதனை அடுத்து அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை இட்டுள்ளார்.
தான் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எவ்வாறு இடதுசாரியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலதுசாரி ஆக மாறினேன் என விளக்கும் ஓர் கிராபிக் படத்தை அவர் பதிவிட்டு இருந்தார். அதே சமயத்தில் தான் தீவிர வலதுசாரிகள் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த கிராபிக் படத்தை உருவாக்கிய காலின் ரைட் என்கிற ஓவிய கலைஞர் எலான் மஸ்க் தனது ஓவியத்தை பகிர்ந்த காரணத்தால் அதனை இணையத்தில் நல்ல விலைக்கு விற்று பணமாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறார். இதற்காக என்எப்டி (non-fungible token) காப்புரிமம் பெற்றுள்ள அவர், ‘எலான் மஸ்க் பகிர்ந்த ஓவியத்தை வாங்க இன்றே முந்துங்கள்..!’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஆபர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
Advertisement