உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதுக்குழு அனுஷ்டிப்பு

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வடக்கு மற்றும் தெற்காசியப் பிரிவுகளின் முதல் உதவிச் செயலாளர் கேரி கோவன் ஆகியோர் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் 2022 ஏப்ரல் 29ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இந்த சந்திப்பில், கொழும்புக்கும் கன்பராவுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளின் முழுமையான வரம்பு மற்றும் பரஸ்பர மற்றும் மூலோபாய நலன்கள் சார்ந்த நிலுவையில் உள்ள விடயங்களிலான எதிர்கால நடவடிக்கை குறித்தும் கலந்ர்ரையாடப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், ஒரு மூலோபாய மற்றும் கூட்டுறவுக் கூட்டாண்மையாக மாற்றப்பட்டு வருகின்ற கடந்த 75 ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தினர்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரழிவால் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அழைக்கப்படுவதைக் கடக்கும் முகமாக, தனது நண்பர்களுடனான கொழும்பின் ஈடுபாடு மற்றும் பொருளாதார நிலைமையை வலியுறுத்தி, இலங்கையின் தற்போதைய நிலை குறித்த விரிவான விளக்கத்தை வெளியுறவுச் செயலாளர் தூதுக்குழுவினருக்கு வழங்கினார்.

இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தமையினால் ஏற்பட்டுள்ள தற்போது நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் வெளியுறவுச் செயலாளர் தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தார். அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய எந்தவொரு தீர்வுக்கும் அரசாங்கமும் ஜனாதிபதியும் தயாராகவிருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார். ஆங்காங்கே நடைபெற்ற சில சம்பவங்கள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளின் நடந்துகொண்ட முறைமை குறித்து கருத்துத் தெரிவித்த வெளியுறவுச் செயலாளர், குற்றவாளிகளை கையாள்வதில் நாட்டின் சட்டம் அதன் சொந்தமான போக்கைக் கையாளும் என்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டைப் பாராட்டிய விஜயம் செய்திருந்த தூதுவர், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் காப்பதற்குமான நற்பெயரைக் கொடுத்துள்ள இலங்கை, ஜனநாயக வழிமுறைகள் மற்றும் கருவிகளின் மூலம் எதிர்ப்பாளர்களை கையாள்வதாகத் தெரிவித்தார். அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்போது இலங்கைக்கு இயலுமான முறையில் உதவுவதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

எல்லை இடர் மதிப்பீடு, கப்பல் கண்காணிப்பு, ஆட்கடத்தல் மற்றும் ஏனைய நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ஒத்துழைப்பை இரு தூதுக்குழுக்களும் ஒப்புக்கொண்டதுடன், ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை முழுமையாக செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஈடுபாடுகளை தீவிரப்படுத்துவதற்குத் தீர்மானித்தன.

‘கடல் பேரிடர் தயார்நிலை பொறிமுறை’ முன்முயற்சியின் மூலம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் மீளாய்வு செய்ததுடன், முன்முயற்சியின் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கும் ஒப்புக்கொண்டனர். மனித உரிமைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விஜயம் செய்திருந்த உதவி செயலாளர் கோவன், உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு வெளியுறவுச் செயலாளர் புதிய தகவல்களை வழங்கினார்.

1947 ஏப்ரல் 29ஆந் திகதி இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே இலங்கையும் அவுஸ்திரேலியாவும் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடல்களில் பங்குபற்றினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மே 1

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.