தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுப்பதற்காக, 4 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள இயங்கிவரும் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
அண்மையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் கூட, முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் நேரடியாக பொதுமக்கள், ‘ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்குவதாகவும், அதனை நாங்கள் எப்படி உண்ண முடியும்’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய இந்த கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என்றும், இந்த குழு ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.