மலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிலாளர் தின நிகழ்வுகளில் தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வு,கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் இன்று (01) நடைபெற்றது.இதன்போது திரு. அண்ணாமலை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.