நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் விதமாக MCLR விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
இது வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!
பணவீக்கம் அதிகரிப்பு
நாட்டில் பணவீக்க விகிதம் என்பது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது விரைவில் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தற்போதிலிருந்தே சில வங்கிகள் வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.
வட்டி அதிகரிப்பு
தற்போது அடமானக் கடன் வழங்குனரான ஹெச் டி எஃப் சி லிமிடெட், அதன் முக்கிய கடன் விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே கடன் வாங்குபவர்களுக்கு மாத தவணையை அதிகரித்துள்ளது.
RPLR – ARHL விகிதம்
இது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகள் சமீபத்தில் வட்டியை அதிகரித்த நிலையில், தற்போது ஹெச் டி எஃப் சியும் வட்டியை உயர்த்தியுள்ளது. இது அடமான கடன் நிறுவனமான இது அதன் ஆர் பி எல் ஆர் (RPLR) மற்றும் ARHL விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகளை மே 1, 2022 முதல் உயர்த்தியுள்ளது.
வட்டி எவ்வளவு?
இதனடிப்படையில் புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. இதே கடன் மற்றும் கடன் தொகையை பொறுத்து, புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் 6.70 சதவீதம் முதல் 7.15 சதவீதம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
HDFC hiked lending rate 5 bps: EMI to rise for existing borrower
HDFC hiked lending rate 5 bps: EMI to rise for existing borrower/கடன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்.. இனி EMI-ம் அதிகரிக்குமே..!