கோயம்புத்தூரில், மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் ஆஸ்பத்திரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரஸ்வதி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவர் மதிமொழியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ஒரு வருடத்திற்கு முன் சரஸ்வதி பணியை விட்டு நின்ற போதும், அவரது கணவர் அடிக்கடி மருத்துவமனைக்கு போன் செய்து ஊழியர்களை திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்பத்திரிக்கு போன் செய்த மதிமொழி மேலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் வெடி குண்டு எதுவும் கிடைக்காததால், போலி மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. தலைமறைவான, மதிமொழியை போலீசார் தேடி வருகின்றனர்.