மேட்ரிமோனியல் மூலம் வந்த மாப்பிளை ப்ரொபைல்; மகள் செய்த காரியம்; கோபமான தந்தை; வைரல் பதிவு!

மேட்ரிமோனியல் தங்களில் வரன் தேடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதன் வழியே சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தமான திருமண வரன்களையும் கண்டடைந்து விடுகின்றனர். சில நேரங்களில் வேடிக்கையாகவும் அமைந்து விடுவதுண்டு. பெங்களூருவைச் சேர்ந்த Salt என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் உதிட்டா பால் (Udita Pal). இவரின் அப்பா மாப்பிள்ளை ப்ரொபைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உனக்குப் பொருத்தமாக இருப்பார். பேசி பார் என உதிட்டாவுக்கு அனுப்புகிறார். உதிட்டாவும் பேசியுள்ளார். அதன் பிறகு தந்தை கோபமாக குறுஞ்செய்திகள் அனுப்புகிறார். அப்படி உதிட்டா என்ன செய்தார்?

அப்பா அனுப்பிய ஸ்கிரீன்சாட்டில், “உன்னிடம் அவசரமாக பேச வேண்டும். நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா. மேட்ரிமோனியல் சைட்டுகளில் இருந்து நீ வேலைக்கு ஆட்களை எடுக்க முடியாது. அந்த பையனின் அப்பாவிடம் நான் என்ன சொல்வேன். அவனிடம் ரெசுயூம் கேட்டதையும் இன்டெர்வியூ லிங் அனுப்பிய மெசஜையும் நான் பார்த்தேன்” எனப் பொங்கியுள்ளார். அதற்கு உதிட்டாவின் பதில் மெசேஜ், “நிறுவனத்தின் 7 வருட அனுபவம் சிறப்பு வாய்ந்தது. அப்புறம் எங்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது” என அனுப்பியுள்ளார்.

தன் மகளுக்கு வாழ்க்கை துணையாக வரக் கூடியவர் என நினைத்து அப்பா அனுப்பிய மாப்பிள்ளையை தன் கம்பெனிக்கு உறுதுணையாக்க முயற்சி செய்திருக்கிறார் உதிட்டா. இந்த ஸ்க்ரீன்ஷாட்டை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் “அப்பாவிடம் இருந்து விடுபடுதல் என்பது இப்படிதான் இருக்கும்” என்கிற கேப்ஷனோடு பகிரவும் செய்திருக்கிறார். பல்வேறு விதமான விமர்சனங்கள் இதற்கு வந்தவண்ணம் உள்ளன. இதன் அப்டேட் ட்வீட் ஒன்றையும் உதிட்டா பகிர்ந்திருக்கிறார், அதில் “அந்தப் பையன் 62 இலட்சம் வருடத்திற்கு சம்பளமாகக் கேட்கிறார். (எங்களால் அவ்வளவுக்கு ஏற்க முடியாது) அப்பா என்னுடைய மெட்ரிமோனியல் ப்ரொபைலை அழித்துவிட்டார். யாரும் என்னை வெறுக்காதீங்க. நான் சீக்கிரம் அழுதுடுவேன்” எனப் பகிர்ந்திருக்கிறார். இதனை நம்பி யாரும் மேட்ரிமோனியல் சைட்டில் வேலை தேடாதீர்கள் நண்பர்களே. எப்போவாவதுதான் இது நடக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.