அட்சய திருதியன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன தெரியுமா?

அட்சய திருதியை இந்துக்கள் வழிப்படும் புனித நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறையை அட்சய திருதியை என அழைக்கிறோம்.

அட்சய என்றால் வளர்க என்று பொருள். அந்த நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்று நம்புகின்றனர். எனவே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செழிப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியன்று வாங்கப்படும் தங்கத்தின் மதிப்பு குறையாது என்றும், தொடர்ந்து மதிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

20 வருட உயர்வில் டாலர் இன்டெக்ஸ்.. தங்கம் வாங்கலாமா..? சென்னை, கோவையில் என்ன விலை..!

அட்சய திருதியை

அட்சய திருதியை

2022-ம் ஆண்டு, அட்சய திருதியை மே 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மே 3-ம் தேதி காலை 5.18 மணிக்குத் தொடங்கும் அட்சய திருதியை, மே 4-ம் தேதி காலை 7:32 மணி வரையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

அட்சய திருதியை முகூர்த்த நேரம்

அட்சய திருதியை முகூர்த்த நேரம்

இந்த வருடம் அட்சய திருதியை அன்று காலை 5:49 மணி முதல் மதியம் 12:13 முகூர்த்த நேரமாகக் குறித்துள்ளனர். இந்த நேரத்தில் மக்கள் தங்கம் வாங்க அதிகளவில் கடைகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தை இப்படியும் வாங்கலாம்
 

தங்கத்தை இப்படியும் வாங்கலாம்

இந்தியர்கள் பெரும்பாலும் தங்கத்தை நகைகளாக வாங்க மட்டுமே விருப்பப்படுவார்கள். ஆனால் டிஜிட்டல், பத்திரம் பொன்ற வகையிலும் தங்கத்தை வாங்கலாம். தங்கத்தை நகைகளாக வாங்குவதை விட டிஜிட்டல் அல்லது பத்திர வடிவில் வாங்கும் போது அது பாதுகாப்பாக இருக்கும். யாராலும் திருட முடியாது என கூறப்படுகிறது. ஆபரணத் தங்கம் போலவே பத்திரம் அல்லது டிஜிட்டல் வடிவில் வாங்கும் தங்கத்தையும் எளிதாக விற்க முடியும்.

சவரன் தங்கம் பத்திரம் திட்டம்

சவரன் தங்கம் பத்திரம் திட்டம்

சவரன் தங்கம் பத்திரம் திட்டம் மூலமாகக தங்கம் வாங்கும் போது கிராம் ஒன்று 50 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கிடைக்கிறது. தங்க நகைகளைப் போன்று இதையும் தேவையான போது வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்றுக்கொள்ளவும் முடியும். தங்கம் பத்திரத்தை விற்க வேண்டும் என்றால் அந்த நாளில் தங்கம் என்ன விலை அதே விலைக்கு விற்று பணமாகவும் பெறலாம். 7.5 ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரம் முதிர்வடையும்.

மியூச்சுவல் ஃபண்டில் தங்கம்

மியூச்சுவல் ஃபண்டில் தங்கம்

தங்கத்தை மியூச்சல் ஃபண்டுகள் மூலமாகவும் வாங்கலாம். அதுவும் மொத்தமாகப் பணம் செலுத்தாமல் SIP முறையில் குறைந்தது 1000 ரூபாய் முதல் வாங்கலாம்.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் மூலம் தங்கம் வாங்கும் போது பேடிஎம் உள்ளிட்ட சில வாலட் சேவை நிறுவனங்கள் 1 ரூபாய்க்கு கூடு தங்கத்தை வாங்கும் சேவைகளை வழங்குகின்றன.

தானம்

தானம்

எது எப்படி இருந்தாலும் அட்சய திருதியை அன்று பொருள் வாங்குவதை விட மற்றவர்களுக்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது. அட்சய திருதியையின் முக்கிய நோக்கமே எந்த பொருளாக இருந்தாலும் அதை தானம் செய்வது தான் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது இப்போது செல்வத்தைச் சேர்க்கும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 இதுவும் வாங்கலாம்

இதுவும் வாங்கலாம்

அட்சய திருதியை அன்று அரிசி, கல் உப்பு, மஞ்சள் வாங்கினாலும் நல்லதுதான். இதை செய்வதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அட்சய திருதியை அன்று கடவுளை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

When Is Akshaya Tritiya 2022? Do You Know The Shubh Muhurat And Time

When Is Akshaya Tritiya 2022? Do You Know The Date, Shubh Muhurat And Time. அட்சய திருதியன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? தங்கம் மட்டும் தான் அட்சய திருதியை அன்று வாங்க வேண்டுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.