தமிழக பா.ஜ.க.,வுக்கு புதிய மாவட்டத்தலைவர்களை நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
மொத்தமாக, 59 மாவட்ட தலைவர்கள், 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய 79 நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், “தென் சென்னை மாவட்டம் காளிதாஸ், சென்னை கிழக்கு மாவட்டம் சாய் சத்தியன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் விஜய் ஆனந்த், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் தனசேகர், வட சென்னை கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகுமார், வட சென்னை மேற்கு மாவட்டம் கபிலன்,திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சரவணன், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அஷ்வின்குமார், காஞ்சிபுரம் மாவட்டம் பாபு, செங்கல்பட்டு மாவட்டம் வேதா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
பால்ராஜ், ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 20 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.