ரஷ்யாவின் தீயணைப்பு ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் கடினமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொகோச்சா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டது.
ரஷ்யாவின் Trans-Baikal பிரதேசத்தில் உள்ள Maklakan பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு ஹெலிகாப்டர் திரும்பிய இச்சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.