ஹைதராபாத்: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஹைதராபாத் எம்.பி ஒவைசி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள பல்வேறு சமுதாய மக்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை தேவையில்லை. பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மின்தட்டுப்பாடு நிலவுகிறது. நிலக்கரியை கொண்டு செல்வதற்காக பயணிகள் ரயில்கள்இந்த வாரம் ரத்து செய்யப்பட் டுள்ளன.
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி கண்டு கொள்ளாமல், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. நம் நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை.
இவ்வாறு ஒவைசி கூறினார்.