பிரபல சமூக வலைத்தளமான
ஸ்னாப்சாட்
அதன் முதல் ட்ரோன் கேமராவை “Pixy” என்று அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பாக்கெட் அளவிலான கேமரா ஆகும். வீடியோக்களை சிறப்பாக உருவாக்க இந்த ட்ரோன் கேமரா உதவுகிறது. நிறுவனம் தனது கிரியேட்டர்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல அம்சங்களை மேம்படுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிய ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. முதலாவதாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த ட்ரோன் கேமரா விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவை வைத்து எடுக்கும் வீடியோக்களில் ஹைப்பர்ஸ்பீட், பவுன்ஸ், ஆர்பிட் 3டி, ஜம்ப் கட் போன்ற விரைவான ஸ்மார்ட் எடிட்களை செய்ய முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பின்னர் பயனர்கள் அதை அரட்டை, கதைகள், ஸ்பாட்லைட் அல்லது வேறு எந்த தளத்திலும் இதை பகிராம் எனவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்
Snap Inc
நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
AC Jacket: சிவாஜி பட ரஜினி மாதிரி ஏசி ஜாக்கெட் வேண்டுமா!
என்ன சொல்கிறது ஸ்னாப்சாட்
அந்த அறிக்கையில், “சுய-வெளிப்பாடு மற்றும் தகவல்தொடர்புக்கு கேமராவைப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய வழியாக ஸ்னாப்சாட்டை நாங்கள் முதலில் உருவாக்கினோம். லென்ஸ்கள் முதல் கண்ணாடிகள் வரை, உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பல வழிகள் உள்ளன.
“இன்று, ஸ்னாப் கேமராவின் சக்தியை நாங்கள் வேறு தரத்திற்கு எடுத்துச் செல்கிறோம். இது கிரியேட்டர்களை பல உயரங்களை தொட செய்யும். அவர்கள் எதிர்பார்த்திராத படைப்புகளை உருவாக்க முடியும். ஆம், நிறுவனத்தின் புதிய வெளியீடு Pixy ட்ரோன் கேமரா.”
“ட்ரோன் நான்கு முன்னமைக்கப்பட்ட விமான பாதைகளில் பறக்க முடியும். இதனை நீங்கள் தனியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றில்லை. நீங்கள் பயணிக்கு இடத்தில் உங்களை பின்தொடர்ந்து பிக்ஸி ட்ரோனும் வந்துவிடும். தேவை முடிந்துவிட்டால், அது மெதுவாக தரையிறங்கும்.”
“ஒரு புதிய கண்ணோட்டத்தில் நீங்கள் விரும்பும் தருணங்களை படம்பிடிக்க வேண்டிய அனைத்தும் இந்த ட்ரோன் கேமரா மூலம் சாத்தியப்படும். ஒரு பொத்தானைத் தட்டினால் போதும், அனைத்தும் சாத்தியம்” என்று ஸ்னாப்சாட் குறிப்பிட்டிருக்கிறது.
ஸ்னாப்சாட் பிக்ஸி விலை
பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் ஸ்நாப்சாட்டின் இந்த புதிய முயற்சி பயனர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. கூடுதல் கண்டெண்டுகளை அவர்கள் உருவாக்க இது உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்புகிறது.
ட்ரோனில் இருந்து பதிவுசெய்யப்படும் வீடியோக்களை வயர்லெஸ் முறையில் உங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றலாம். இது
Snapchat
ஸ்டோரேஜில் பத்திரமாக சேமிக்கப்படும். அங்கிருந்து, பயனர்கள் வீடியோவை எடிட் செய்யலாம். அதுமட்டும் இல்லாமல் வேறு தளங்களிலும் அதனைப் பயன்படுத்தலாம்.
Smart Bottle: ஸ்மார்ட் பாட்டிலை விற்கும் ஆப்பிள் – விலை எவ்வளவு தெரியுமா?
ஸ்னாப் நிறுவனத்தின் புதிய பிக்ஸி ட்ரோன் கேமராவின் விலை $249.99 அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.19,000 ஆக உள்ளது. அமெரிக்கா, பிரான்சில் மட்டும் முதற்கட்டமாக இந்த ட்ரோன் கேமரா விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.