மதுபோதையில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து தினேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது,. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சதீஷ்குமார் மற்றும் அருண் ஆகிய இருவரையும் தினேஷ் அங்கிருந்த கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறீத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தினேஷ் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மதுபோதையில் ஏற்பட்ட தகராற்றில் நண்பர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.